|
|
 |
 |
Friday, January 16, 2004
Your own piece of land on Moon!!!!
நாகரிகம் கண்ட அனைத்து மனித இனமும் அண்டத்தைப் பற்றியும் கோள்களைப் பற்றியும் தேடுதல் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. அதில் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் நடந்துவரும் பல்வேறு வகையான வியக்க வைக்கும் ஆய்வுகள் புதிய விஷயங்களை நாளுக்கு நாள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. புதிய விஷயங்கள் நமக்குக் கிடைக்கும் போது அதில் அடிப்படையிலேயே எதிர்பார்ப்பும் ஆச்சரியங்களும் சேர்ந்தே வருகின்றன என்பதுதான் உண்மை.

பூமிக்கு மிக அருகிலிருக்கு நிலவில் கால் பதித்ததோடு நின்று விடவில்லை மனிதனின் ஆர்வம். மற்ற மற்ற கோள்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சிகள் வெகு துரிதமாக தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிலும் கடந்த சில வருடங்களில் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வரும் செயற்கைகோள் எண்ணிக்கை, அதோடு வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படும் ரோபோட் இயந்திரங்கள் போன்றவை இதனை நிரூபிப்பவனவாகவே இருக்கின்றன.
12 வருடங்களாக பல கோள்களைச் சுற்றி வந்த Voyager-II இதில் முக்கியமான ஒன்று. பூமிக்கு வெளிச்சுற்றில் உள்ள ஏனைய 5 கிரகங்களில் 4 கிரகங்களுக்குச் சென்று இறுதியாக 1989ல் Neptune அடைந்தது Voyager-II. இந்த மிகப்பெரிய கோளச் சுற்றுலாவிற்குப் :-) பிறகு பூமிக்கு அருகிலிருக்கும் ஏனைய கிரகங்களைப் பற்றிய பயனுள்ள கற்பனையற்ற உணமைத் தகவல்களைப் பெற முடிந்தது அறிவியல் உலகில் நிச்சயமாக ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.
 நிலவுக்குச் செல்ல வேண்டும்; அங்கு மனிதன் கால் வைத்து நடக்க வேண்டும்; அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் ன்றியதற்கும் செவ்வாய் கிரகத்திற்குத் தொடர்ந்து பல ஆய்வு போட்கள் அனுப்பப்பட்டு வருவதற்கும் அடிப்படையில் ஒற்றுமையைக் காட்டக்கூடிய சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. மனிதனுக்கு பூமிக்கு அருகிலிருக்கும் மற்ற கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்வதில் தீவிர அவா இருக்கின்றது. ஆழ்மனத் தேடலோடு விஞ்ஞானமும் சேர்ந்து கொள்வதால் இது அறிவியல் தேடலாக பெயர் ண்டுவிடுகின்றது. அடுத்ததாக, மிக அற்புதமான வகையில் வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் கணினி இயந்திரத் ழில்நுட்பம் அண்டங்களை கணினி இயந்திரத் தொழில்நுட்பத்தின் துணையோடு அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியிருக்கின்றது. பற்பல ண்வெளி முயற்சிகள் தோல்வி கண்டிருக்கின்ற நிலையிலும், இவ்வகை ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதற்கு இதுதான் அடிப்படையில் காரணமாக இருக்கின்றது.
பூமியில் இடம் இல்லாத போது, அல்லது பூமி மனிதர்கள் வாழ்வதற்குத் தகுயில்லாமல் போகும் போது வேற்று கிரகங்களுக்குச் சென்று வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்குமா என சிந்திக்கும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த மனதில் எழும் எண்ணத்தைக் கடந்து, நிலவிலும் மற்றும் அருகிலுள்ள மற்ற கிரகங்களிலும் நிலங்களை வாங்கி இப்போதே நாம் சொத்துக்களைச் சேர்ப்போமே என்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கரான டென்னிஸ், MoonEstates.com வழி இங்கிலாந்து மக்கள் இந்த நிலங்களை வாங்க முடியும் என்று அறிவித்து வலைபக்கத்தின் வழி இந்த விற்பனையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த வலைப்பகத்தில் உள்ள தகவலின் படி, நிலவில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் 16.75 இங்கிலாந்து பவுனுக்குக் கிடைக்கின்றது. இந்த சுவையான தகவலைத் தெரிந்து கொள்ள http://www.moonestates.com சென்று பாருங்களேன்.
Published at 09:10 pm by ksuba
Thursday, January 15, 2004
Mars - Spirit and the Opportunity
சனிக்கிழமை இரவு செவ்வாய் கிரகத்தில் கால்வைத்து அறிவியல் உலக தேடலில் புதிய த்தியாயத்தைத் தொடங்கியிருக்கின்றது நாசாவின் Spirit Rover. இந்த முயற்சி உலகளாவிய அளவில் பெரிய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கின்றது.
1958ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நாசா பல்வேறு விண்வெளி ஆராச்சிகளுக்கு இடையில் செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் தனி கவனத்தை செலுத்தி தனது ஆய்வுகளை மெற்கொண்டு வருகின்றது. பூமியைப்ப் போலவே இந்த கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மிக முக்கியமானதாகக் கருத்தப்படுவது 1997ல் அனுப்பப்பட்ட நாசாவின் Path Finder ரோபோட். மனிதர்கள் யாருமின்றி தனியாகவே தகவல்களைச் சேகரிக்கும் வகையில் இந்த நுணுக்கமான ரோபோட் அங்கு சென்றுவந்தது.
இப்போது அதற்கும் ஒரு படி மேலாக செயல்படும் அளவிற்கு Spirit ஊவாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் Spirit நாசாவின் ஆராச்சிக் கூடத்திற்கு அனுப்பிக்கொண்டிர்க்கும் தகவல்கள் செவ்வாய் கிரகத்தின் தரைமட்டத்தை, மணல் வெளியை, அதன் தன்மையை நுணுக்கமாக படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக செல்லவிருக்கின்ற Opportunity ரோவர் வரும் 24ம் தேதி செவ்வாயைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோலிவூட் பட நிறுவனத்தினர் பலரும் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வருகின்ற மனிதர்களை வைத்து கதைகளைப் பின்னி படம் எடுத்திருக்கின்றனர். 1953ல் ஹோலிவூட் தயாரிப்பாக வெளிவந்த The War of The worlds இத்தகையதே. தற்போதைய கலிபோர்னியா மேயர் Arnold Schwazeneger ன் படமான Total Reacall (1990) கூட செவ்வாய் கிரகத்தில் நடமாடக்கூடிய ஒரு வகை ரோபோட்டை வைத்து பின்னப்பட்ட கதையே. "பூமியைப் போலவே செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழக்கூடும். அவர்களும் பூமியில் உள்ள மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக் கூடும்" என்ற கதைகளை வளர்க்கும் சில நாடகத் தொடர்களை StarTrak - The Next Generation வழங்கியது. இப்படங்களைப் பார்த்த பொழுது பள்ளி மாணவியாக இருந்த எனக்கும் செவ்வாய் கிரகத்தில் பயங்கர வடிவிலான மனிதர்கள் இருக்கக்கூடிய சாத்தியம் இருக்குமோ என்ற எண்ணம் இருந்து வந்தது.
இண்டெர்நெட் யுகத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு எல்லைகளைக் கடந்ததாதவே இருக்கின்றது. நாசாவின் பல்வேறு தரப்பட்ட ஆய்வுக் குழுக்கள் இளம் வயதிலேயே சிறுவர்களும் பவகையான அறிவியல் கண்டுபிடிப்புக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கி வருகின்றன. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள 2 ரோவர் ரோபோட்களுக்கு பெயரிடும் வகையில் 9 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்குப் போட்டி ஒன்று கடந்த ஆண்டு வைக்கப்பட்டிருந்தது. சிறந்த கட்டுரை எழுதி அதன் வாயிலாக இந்த 2 ரோவர்களுக்கும் பெயர்களை தேடும் வகையில் இந்த போட்டி உருவாக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்று, இந்த இரண்டு ரோவர்களுக்கும் பெயர் சூட்டியவர் Sofi என்ற பெயர் கொண்டு 9 அயது சிறுமி. இந்த இரண்டு ரோவர்களுக்கும் Spirit, Opportnity என்று இவர் பெயரிட்டு எழுதிய சிறிய கட்டுரை இதோ.
"I used to live in an orphanage. it was dark and cold and lonely. At night, I lookd up at the sparkly sky and felt better. I dreamed could fly there. In America, I can make all my dreams come true. Thank you for giving me the 'Spirit' and the 'Oportunity". சோபி சைபீரியாவில் பிறந்தவள். தனது இரண்டு வயது வரையில் ஒரு அனாதை இல்லத்தில் வாழ்ந்து வந்தவள். இவளை அமெரிக்க பெண்மனியான லாரி கோலிn தத்தெடுத்து தனது மகளாக ஆக்கிக் கொண்டார். இருவரும் இப்போது அமெரிக்காவில் அரிஸோனாவில் இருக்கின்றனர். Spirit ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட அன்று சோபிக்கும் அவள் தாயாருக்கும் நாசா பிரத்தியேக விமான டிக்கட்டுகளை வழங்கி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கியிருந்தது. சோபிக்கு இப்பொழுதே விண்வெளி வீராங்கனையாக வரவேண்டுமென்பதுதான் கனவாக, எதிர்கால ஆசையாக இருகின்றதாம். இவளைப் போன்ற பல இளம் சிறார்கள் நாசாவின் திட்டங்களில் பல்வெறு வகையில் சேர்ந்து கொண்டு தனது கணவுகளை வளர்த்து வருகின்றனர்.
பண்டைய காலத்தில் தமிழர்களைப் போலவே ரோமானியர்களும் ஒவ்வொரு கிரகத்திற்கும் பெயரளித்து அதற்கு ஒரு கடவுளையும் உருவாக்கியிருக்கின்றனர். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் கடவுள் ஒரு போர்வீரராகவே கருதப்பட்டார். முதலில் இந்தக் கடவுள் வேளாண்மை செய்யக்கூடியவராக, வேளாண்மை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவராகவே கருதப்பட்டுவந்தார். ஆனால் நாளடைவில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு போர் வீரராக மாற்றம் கொண்டார். இந்தக் கடவுளுக்கான பிரத்தியேகமான விழாக்களும் கூட உண்டு.
Kids, Visit this fabulous web site to get more information about Mars - http://marsprogram.jpl.nasa.gov/funzone_flash.html
Published at 07:07 am by ksuba
Friday, January 09, 2004
Travelog - Seoul, S.Korea 7
கிம்சி
தென்கொரியர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் கிம்சி மிக முக்கிய அங்கம் வகிப்பதைப் பற்றி முன்னரே தெரிவித்திருந்தேன். அதைப் பற்றி மேலும் சில விபரங்களோடு இந்தப் பகுதியைத் தொடர்கிறேன்.
winter காலங்களில் எல்லா விதமான காய்கறிகளும் பயிரிடப்படுவது கிடையாது. குளிர் -12 டிகிரி வரை செல்வதால் காய்கறி பயிரிடப்படும் இடங்களெல்லாம் பனியில் உறைந்து விடும். (சில நாட்களுக்கு முன்னர் Kwangju செல்லும் வழியில் பணியில் உறைந்திருந்த நெல் வயலைப் பார்த்தேன். பச்சை பசேலென இது வரை நெல் வயலைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு நெல் வயலை உறைந்து போன நிலையில் பார்ப்பதற்கு மனதிற்குக் கஷ்டமாகத் தானிருந்தது)
அதனால் கோடை அல்லது இலையுதிர் காலங்களிலேயேக் காய்கறிகளைப் பதனிடும் வேலையைத் தொடங்கி விடுகின்றார்கள். காய்கறிகளை மாத்திரம் அல்ல. மீன், பல வகை கடல் வாழ் உணவு வகைகள், இறைச்சி போன்றவற்றையும் இப்படி செய்து வைத்து விடுகின்றார்கள். உப்புக்கண்டம் போடுவது என்று சொல்வார்களே, அப்படித்தான். இதனை கொரிய மொழியில் Gimjang என்று அழைக்கின்றார்கள்.
Gimjang செய்வது பரம்பரை பரம்பரையாக பேணிக் காக்கப்படும் ஒரு முக்கியக் கலையாகவே இருந்து வருகின்றது. ஒரு கொரியருக்கு முக்கியமாக மதிய, இரவு உணவுகளில் கிம்சி இல்லாமல் சாப்பிடுவது என்பது நினைத்தும் கூட
பார்க்க முடியாத ஒரு விஷயம். நான் இதுவரை சென்று வந்துள்ள எந்த நாட்டிலுமே பார்த்திராத வகையில் Kimchi Burger, Kimchi Pizza இங்கு பிரத்தியேகமாக கிடைப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்த Berger, Pizza உணவு வகைகளிலும் கிம்ச்சியை சேர்த்து வைத்திருக்கும் பெருமை கொரியர்களையேச் சாரும்..:-)
ஒரு பேரங்காடியில் வைக்கப்பட்டிருந்த கிம்சி வகைகளைத் தான் இங்கு பார்க்கின்றோம்.

பாரம்பரிய ஓவியக் கலை
 |
கொரியர்களின் பாரம்பரிய ஓவியம் அடிப்படையிலேயே மேற்கத்திய ஓவியக் கலையிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருப்பதைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ள முடியும். அரச மாளிகைகளிலும், இன்றளவும் பாதுகாக்கப்படும்
பழங்கால பௌத்த ஆலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக் காண முடியும். இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்ற சில ஓவியங்களின் காலம் 57 B.C லிருந்து கூட குறிக்கப்படுவதாக சில நூற்கள் குறிப்பிடுகின்றன.
|
Goryeo Dynasty ஆட்சிக்கு வந்த சமயத்தில் தான் புத்த சமயம் இங்கு பரவி மிகப் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அப்போது பரவலாக மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் விளக்கும் பல ஓவியங்கள்
தீட்டப்பட்டதாம். Confucionism 1392 க்குப் பிறகு கொரியாவில் பரவ ஆரம்பித்த பிறகு சீனர்களின் தாக்கம் கொரிய ஓவியங்களில் பரவலாக வளர ஆரம்பித்தது. ஆனால் இந்த மாற்றங்களெல்லாம் folk art, folk painting இவற்றை எந்த அளவும் பாதிக்கவில்லை என்றே தெரிகின்றது. இன்றளவும் பழமையை விளக்கும் அந்த எளிய ஓவிய முறைகள் கல்லூரிகளிலும் பாடமாகக் கற்றுத் தறப்படுகின்றன.
Published at 09:19 am by ksuba
Tuesday, January 06, 2004
Book Review - 'PoYil PUtha Nijam' by Vaasanthy
(A short break for my Seoul Travelog)
பொய்யில் பூத்த நிஜம் - வாஸந்தி
| நீண்ட தூர பயணங்கள் அலுப்பைத் தரக்கூடியவை. எப்போதும் தூரம் பயணம் செல்லும் போது கையில் புத்தகத்தை எடுத்துச் செல்வது எனக்கு வழக்கமாகி விட்டது. இந்த முறை தென் கொரியா பயணத்தின் போதும் சில புத்தகங்கள் கைவசமிருந்தன. நாவல்கள் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் வாஸந்தியின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். பொய்யில் பூத்த நிஜம் எனபது இந்த புத்தகத்தின் பெயர். கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கின்றது இந்த நாவல். |
 |
ஈராண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை வாஸந்தியை நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அவர் இந்தியா டுடே பத்திரிக்கையின் தமிழ்ப்பகுதியின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த நேரம். சென்னையிலிருக்கும் அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்து உரையாடிக்
கொண்டிருந்ததும், அருமையான ஒரு உணவகத்தில் அவரோடு சேர்ந்து மதிய உணவுக்குச் சென்றதும் மறக்க முடியாதவை. அப்போது அவரது கைவசமிருந்த 'யுக சந்தி' என்ற நாவலை கையெழுத்துப் போட்டு கொடுத்தார். ஜெர்மனி திரும்பி வரும் வழியில் அதனை படித்து முடித்து மகிழ்ந்தேன். இப்போது இந்த நாவல்!
நிச்சயமாக வித்தியாசமான ஒரு கதைதான். வாஸந்தியின் தமிழ் நடையைப் பற்றி விபரிப்பதற்கு நான் ஒரு எழுத்தாளரே அல்ல. அதனால் கதையின் கருவை மட்டுமே கொஞ்சம் தொட்டு எழுதலாம் என்று நினைக்கின்றேன். இப்போது மாறிக் கொண்டு வரும் வாழ்க்கை முறைகளைப் பற்றி கதை செல்கின்றது. அன்பினைப் பகிர்ந்து கொள்ள திருமணம் தேவையா என்பதே கதையின் கரு. ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 5 ஆண்டுகளில் இவரது கதையையும் இந்தக் கருத்தையும் புரிந்து கொள்வதில் எனக்கு எந்த வித சிரமமும் இல்லை. ஜெர்மனியின் ழ்க்கை முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் நண்பர்களாகவே இருவர் சேர்ந்து வாழ்வது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட ஒரு நிலை. இதனை தமிழக மற்றும் மலேசிய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்பது சிரமமான ஒன்று என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதே நேரத்தில் திருமண பந்தத்தில் இருக்கின்றோம் என்பதற்காக உலகத்திற்காக போலி வாழ்க்கை வாழ்ந்து வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் தம்பதிகளின் நிலையைப் பற்றியும் மிக அழகாக வெளிக்காட்டியிருக்கின்றார் வாஸந்தி. திருமணத்தின் பயனாக எஞ்சி நிற்பது விரக்தியும் வெறுப்பும்
மட்டும்தான் என்ற நிலையை விட திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பது ஆறுதல் என்பதையும் இந்த நாவலைப் படிக்கும் போதே சிந்திக்க முடிகின்றது.
தனி மனித உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டங்களை புதைத்து விட்டு வெளியே நடத்தும் போலி வாழ்க்கையை சமுதாயம் ஏற்றுக் கொள்கின்றது; ஆனால் வெளிப்படையாக வாழ்க்கையைப் புரிந்து கொண்ட பின்னர் குடும்பம் எனும் கட்டமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு உருவாக்கிக்கொள்ளும் உறவுகளை சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இங்கு சமுதாயம் என்பது யார் என்பதும் கேள்வியாகின்றது. சிந்தனைக்கு வேலை கொடுக்கும் ஒரு கருவைத்தான் வாஸந்தி கதையாக்கியிருக்கின்றார்.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களில் முக்கியமானோர் சகுந்தலா, ராஜமோகன், சரவணன், காமாட்சி, விவேக், சுதிர், mrs.Malhothra, அதோடு குந்தலாவின் பாட்டி. சகுந்தலா வேலை செய்வதால் வாழ்கையில் தான் சந்திக்கும் பெரும் இடியை தாங்கிக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்க முடிகின்றது. சமுதாயத்தில் பெண்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கிடைக்க வேண்டுமானால் கல்வி, கல்வியைச் சார்ந்த உத்தியோகம், சுயமாக சம்பாதித்து சுயகாலில் வாழ்க்கை நடத்துவது போன்ற அம்சங்கள் அடிப்படைத் தேவை என்பதையும் இந்த நாவல் மறை முகமாக உணர்த்துகின்றது என்பதை படிக்கின்ற வாசகர்கள் உணரமுடியும்.
Mrs.மல்ஹோத்ராவின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கின்றது. கதைக்கு அவ்வளவு முக்கியமில்லாத கதாபாத்திரம் என்றாலும் கூட, இந்த பாத்திரத்தின் தன்மை உயர்ந்த மனம் படைத்த மக்களின் அன்பை வர்ணிப்பது சிறப்பாக அமைந்திருக்கின்றது. மேலும் சில குட்டி குட்டி கதாபத்திரங்கள் இடையிடையே வந்து செல்கின்றன. இந்தக் கதையின் திருப்பங்களையெல்லாம் பார்க்கும் போது, அதிலும் குறிப்பாக முடிவுப் பகுதியைப் படிக்கும் போது, இதனை ஒரு சினிமா படமாக எடுத்தால் (சரியான இயக்கத்துடன்;;:-) ) நன்றாகவே ஓடும் என்று தெரிகின்றது.
ஆக மொத்தத்தில் வெறும் நாவலாக மட்டுமில்லாமல், படித்த பிறகும் அந்த கதாபாத்திரங்களை மனதில் அசை போடவைப்பதில் வாஸந்தி வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.
Published at 05:41 am by ksuba
Thursday, January 01, 2004
Travelog - Seoul, S.Korea 6
கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்கும் அதனதன் தனித்துவத்தை வெளிக்காட்டும் முக்கிய அம்சங்களாக அமைந்து விடுகின்றன. கொரியர்கள் தங்களுக்கே உரிய பரம்பரிய விஷயங்களை இன்றளவும் நடைமுறையில் வைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே தோன்றுகின்றது. கொரியர்களுக்கென்று தனிப்பட்ட இசை, நடனம், பாரம்பரிய ஆடைகள், வாழ்க்கை முறை, பெயர்கள், கைவினைப் பொருட்கள் இப்படி பல விஷயங்கள் அவர்களை மற்ற இனத்தவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக அமைந்திருக்கின்றன.
பெரும்பாலான கொரியர்களின் குடும்பப்பெயர்களைச் சிறிய பட்டியலாக்க முடியும். தென்கொரியா சுற்றுலா வழிகாட்டியின் அறிக்கையின்படி Kim எனப்படும் குடும்பப்பெயர் கொண்டோ ர் ஏறக்குறைய 21 விழுக்காட்டினர் உள்ளனர். Yi (அல்லது Lee அல்லது Rhee) ஏறக்குறைய 14 விழுக்காட்டினர். Park (அல்லது Pak) ஏறக்குறைய 8 விழுக்காட்டினர். Choi ( அல்லது choe) Joong (அல்லஹு Chung), Jang (அல்லதுChang), Han, Lim, போன்றவை பிற. ஒரு கொரிய பெயர் எப்போதும் குடும்பப் பெயரோடுதான் தொடங்கும். திருமணமான பிறகும் பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை மாற்றிக்கொள்வதில்லை. அவர்கள் தங்களுடைய குடும்பப் பெயரையே வைத்திருக்கின்றனர். ஆனால் பிறக்கின்ற குழந்தைகளுக்குத் தந்தையின் குடும்பப்பெயரை தான் முதற்பெயராக வைக்கின்றனர். ஜெர்மனியில் இப்படியில்லை. பொதுவாகவே திருமணம் நடக்கும் போது பெண், மணமகனின் குடும்பப்பெயரை எடுத்துக் கொள்ளவேண்டும். திருமணம் ஆனபிறகு அவர்களுக்கு ஒரு குடும்பப்பெயர் தான் இருக்கும். குழந்தைகளும் இதையே வைத்திருப்பர்.(ஆனால் இதிலும் இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கின்றது. திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண்ணின் குடும்பப்பெயருக்கு மாறிக்கொள்வதும் இப்போது இங்கே அதிகரித்து வருகின்றது)
 |
சியோல் நகரின் தெருக்களில் நடந்து செல்லும் போதே பல கடைகளில் அழகான கொரிய பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்வதைக் காணமுடியும். இந்த வகை ஆடைகளை அணிந்த பெண்களைச் சாதாரணமாக சாலைகளில் காணமுடிவதில்லை. இதற்கு குளிர் காரணமா அல்லது இவர்கள் இதனை அணிய விரும்புவதில்லையா எனத் தெரியவில்லை. |
பெண்கள் அணிந்து கொள்ளும் இந்த உடைக்கு hanbok என்று பெயர். ஆண்கள் அணிந்துகொள்ளும் பண்பாட்டு உடைக்கு jeogori-baji என்று பெயர். திருமணத்தின் போது கட்டயமாக இந்த உடை அணிந்து கொள்வார்கள் போலும். நூறு அண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாகரீக உடைகள் தென்கொரியாவிற்கு அறிமுகமாவதற்கு முன்னர் பெண்கள் இவ்வகை ஆடைகள் தான் அன்றாடம் அணிந்திருப்பார்களாம். ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது. அதிகமாக இந்த வகை ஆடைகள் பயன்படுத்தப்படாத போதும் இதனை விற்பனை செய்யும் கடைகள் பல இருப்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. இந்த உடையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வலைப்பக்கத்திற்குச் செல்க!
http://tour.daegu.go.kr/tour2/homestay/eng/pr/pr8.html
http://www.asianinfo.org/asianinfo/korea/cel/hanbok.htm
Published at 05:22 am by ksuba
Monday, December 29, 2003
Travelog - Seoul, S.Korea 5
மங்கோலியப் பேரரசர் ஜெங்கிஸ் கான் கொரியாவில் மீண்டும் பிறப்பார் என்று ஒரு நம்பிக்கை கொரிய மக்களுக்கு இருந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் 1206ல் Temujen என்ற ஒருவரை ஜெங்கிஸ் கான் என்று தேர்ந்தெடுத்து மகுடாபிஷேகம் செய்வித்து மகாராஜாவாக்கியிருக்கின்றனர்.
அரசர்களுக்கான அரண்மனைகள், அதனைச் சேர்ந்தார்போல அமைந்திருக்கும் பூந்தோட்டங்கள் ஆகியவை சியோல் நகரத்தின் பல மூலைகளில் காண முடிகின்றது. ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் இந்த அரண்மனைகளைச் சிதைக்காமல் இருந்திருந்தால் மேலும் பல கலை நயம் மிக்க அரண்மனைகளை இப்போது காண முடியும்.
சியோல் பெரிய நகரமாக இருந்தாலும், இங்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வது என்பது மிகச் சுலபமாகவே இருக்கின்றது. இந்த நகரத்தின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பொது வாகன வசதிகள் அதிலும் குறிப்பாக subway அமைந்திருப்பது பாராட்டக்கூடிய ஒரு விஷயம்.

முதல் நாள் வேண்டிய அளவிற்கு shopping செய்து முடித்து விட்டதால் மேலும் சில முக்கியமான இடங்களைப் பார்த்து வர முடிவு செய்திருந்தேன்.
சம்சியோங்-டோ ங் பகுதி எனது பட்டியலில் அடுத்ததாக இருந்தது. இங்குதான் சியோலின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டக் கூடிய பிரமாண்டமான
கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவை இருக்கின்றன. சியோல் உலக வர்த்தக மையம் போங்கூன்சா கோவில், குக்குவோன் என அழைக்கப்படும் தேக்குவாண்டோ தலைமையகம் போன்றவை இங்கிருக்கும் சில முக்கிய இடங்கள்.

மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கின்ற சியோல் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தார் போன்றே Coax Mall இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் வேடிக்கைப் ர்த்துக் கொண்டும் செல்வதுமாக இந்த இடம் இருக்கின்றது. இந்த Coax Mall உள்ளேயே 16 திரையரங்குகள் கொண்ட ஒரு சினிமா மையமும் இருக்கின்றது. அதன் அருகிலேயே இளைஞர்கள் computer games விளையாடுவதற்காக ஒரு பகுதி இருக்கின்றது. இந்த விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குளிர் காலத்தில் வெளியே செல்வதற்கு பதிலாக Coax Mall போன்ற இடங்கள் பொழுது போக்கு மையங்களாக அமைந்து விடுவதைக் காண முடிகின்றது. இங்கு எனக்கு மன நிறைவளைக்கும் படியாக சுவையான காபியும் கிடைத்தது. வர்த்தக மையத்தில் பல மூலைகளில் பொது தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த தொலைபேசிகளுடனேயே சேர்ந்தார் போல இணைய வசதி அமைந்த கணினியும் இருக்கின்றது. பொதுமக்கள் இந்த சேவையை எந்தக் கட்டணமுமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Published at 09:29 am by ksuba
Wednesday, December 24, 2003
Travelog - Seoul, S.Korea 4
கொரியாவிற்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள் கொரிய மொழியில் கற்று வைத்திருப்பது முக்கியம் என்று இங்கு வந்த உடனேயே தெரிந்து கொண்டேன். மொழி தெரியாவிட்டால் நம் பாடு அதோ கதிதான். கொரிய மக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்; அதுவும் ஒரு சிலர் மட்டுமே. சியோல் போன்ற பெரிய நகரத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற தீவிகளிலும் சிறிய நகரங்களிலும் நிலமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்.
கொரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் கடைகளைப் பார்த்தபடியே தேடிக் கொண்டு வரும் போது உணவு வகைகளை படம் பிடித்து வைத்திருந்த ஒரு விளம்பரப்பலகையைப் பார்த்து இங்கு நிச்சயம் நாம் சாப்பிட ஏதாவது நிச்சயமாகக் கிடைக்கும் என்று கண்ணன் அழைத்து
வந்தார். ஒரு பக்கத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடும் வகையில் குட்டையான மேசைகள்; மற்றொரு பக்கத்தில் சாதாரண வகை மேஜை நாற்காலி. தரையில் உட்கார்ந்து கொரிய உணவை சாப்பிடக்கூடிய மன நிலையில் நான் இல்லை. அரண்மனையைச் சுற்றியதில் நல்ல கால்வலி. அதனால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லி கண்ணன் தேர்ந்தெடுத்த Bibimbap உணவிற்காகச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். முதலில் ஒரு தட்டில் கிம்சி வந்தது. அவித்த கேபேஜில் அரைத்த சிவப்பு மிளகாயைக் கொட்டி அதோடு சாப்பிட கொஞ்சம் இதுவரை நான் பார்த்திராத வேர்களினாலான சாலட் கொண்டுவந்து வைத்தார்கள். பின்னர் சற்று நேரத்தில் எங்களுக்கான Bibimpab வந்தது. அழகான பெரிய
சட்டியில் வெள்ளரிக்காய், கேரட் துறுவல், tofu, மேலும் சில பெயர் தெரியாத கொரிய காய்கறிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சாதம் இருந்தது.
சுவைத்து ரசித்து சாப்பிடக்கூடிய வகை உணவு இல்லையென்றாலும் பார்ப்பதற்குக் கண்ணுக்கு அழகாக இந்த உணவு இருந்தது. ஊறுகாயை தொட்டுக் கொண்டு தயிர்சாதம் சாப்பிடுவது மாதிரி நினைத்துக் கொண்டு கிம்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சாப்பிட்டு முடித்தேன்.

மதிய உணவிற்குப் பின்னர் Namdaemun Market செல்ல நான் கிளம்பினேன். சியோலில் இம்மாதிரியான சாலையோரக் கடைப்பகுதிகள் சில இருக்கின்றன. அவற்றில் இந்த Namdaemun Market தான் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கு ஆண் பெண்களுக்கான உடைகள், தொப்பிகள், காலணிகள், குளிர் ஜேக்கட்டுகள்,
கைப்பைகள், ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் பிரச்சனையே. வெளியே குளிர் காற்றூம் அதிகமாக இருந்ததால் அதிக நேரம் வெளியே நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை. கொரிய குளிர் ஜாக்கெட் ஒன்று வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தேன். அழகான இளம் சிவப்பு நிறத்திலான ஒரு ஜாக்கெட். அதனை எடுத்து விலை கேட்க ஆரம்பித்தேன். விற்பனை செய்பவளுக்கு 'Yes', 'service' என்பதைத் தவிர வேறு எந்த ஆங்கிலச் சொற்களும் தெரியாது. எனக்கு சில எண்களைத் தவிர வேறு எந்த கொரிய சொல்லும் தெரியாது. ஒரு calculator எடுத்துக் கொண்டு அதில் 120,000 வொன் என்று அழுத்திக் காட்டினாள். நான், முடியாது 30,000 வொன் தான் தருவேன் என்று மாற்றி அழுத்திக் காட்ட, அவள் ஒரு விலை சொல்ல நான் ஒரு விலை சொல்ல என்று
இறுதியாக 60,000 வொன் என்று முடிவானது. இந்த ஜேக்கட்டை வாங்கியதற்காக ஒரு இலவச அன்பளிப்பாக சட்டையில் அணிந்து கொள்ளும் அலங்காரப்பின் ஒன்றையும் 'service' என்று சொல்லிக்கொண்டு கொடுத்தாள்.
இங்கு பலரும் இப்படிச் சொல்லி பொருட்களை விற்பது சகஜமாக இருக்கின்றது. கொரிய பெண்கள் yes, மற்றும் service என்று சொல்வதும் ரசிக்கத்தக்கவை. yes என்பதை yessu...uu , service என்பதை servisu...uu என்று இழுத்து சொல்லிக் கொண்டு சிரிப்பது அழகாக இருக்கின்றது.
Published at 10:23 pm by ksuba
Travelog - Seoul, S.Korea 3
1948ல் சுதந்திரம் அடைந்த பிறகு தென் கொரியாவின் வளர்ச்சி மிகத் துரிதமாகவே நடந்திருக்கின்றது. இந்த நாட்டில் சமய சுதந்திரம் என்பது காக்கப்படுகின்றது. இந்த நாட்டின் மிகப் பழமையான மதங்களான Shamanism, பௌபத்தம், மற்றும் கொன்பூஷியனிசம் ஆகியவை இன்றளவும் இங்கு
அனுஷ்டிக்கப்படுகின்ற மதங்களாகவே இருக்கின்றன. இந்த நாட்டிற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் கிற்ஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டிய அலங்காரங்களையும் சிறப்பு
விற்பனைகளையும் சியோல் நகரத்தின் எல்லா தெருக்களிலும் காண முடிகின்றது.
சியோல் உலகிலேயே ஐந்தாவது பெரிய நகரம் என்ற சிறப்பையும் கொண்டிருக்கின்றது. சியோல் நகரம் மாத்திரமே 10.3 மில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கின்றது. subway இரயிலில் பயணிக்கும் போது மாலை நேரங்களில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை வருகின்ற இந்த
இரயில்களில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தாலே இங்குள்ள ஜன நெருக்கடியைப் பற்றி நம்மால் ஊகித்துக் கொள்ள முடியும்.
முதல் நாளே திட்டமிட்டிருந்தபடி சியோல் நகரில் இருக்கும் பழமை வாய்ந்த மிகப்பெரிய இந்த அரண்மனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். இந்த அரண்மனை முதன் முதலில் 1418ல் கட்டப்பட்டது. Sejong மகாராஜா தனது தந்தையார் Taejong மகாராஜாவிற்காக இந்த அரண்மனையைக் கட்டினார். ஜப்பானியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்துகொண்டிருந்த போது சியோல் நகரில் உள்ள இதைப்போன்ற பல அரண்மனைகளை எரித்திருக்கின்றனர். ஆனால் இந்த அரண்மனையின் அழகும் அதன் தனித்துவமிக்க வடிவமும் ஏதாவது ஒரு வகையில்
அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் இந்த அரண்மனையை ஜப்பானியர்கள் பூங்காவாகவும் மிருகக்காட்சி சாலையாகவும் சற்று மாற்றி அமைத்து, அரண்மனையின் அறைகளை அரசாங்க அலுவலகமாகவும் ஆக்கி வைத்திருந்தனர். 1980 வாக்கில் இந்த அரண்மனையைப்
பாதுகாக்கும் திட்டத்தை அரசாங்கம் வகுக்க ஆர்ம்பித்தது. அப்போது இங்கிருந்த மிருகக்காட்சி சாலையை வேறிடத்திற்கு மாற்றி விட்டு முழு அரண்மணையயும் அரசாங்கத்தின் பார்வைக்கே கொண்டு வந்து விட்டது. ஜப்பானியர்கள் தென் கொரிவாலிருந்து வெளியேறிய பின்னர் 1989
வரை இங்கு அரச பரம்பரையைச் சேர்த்தவர்கள் மீண்டும் வந்து தங்கியிருந்தனர். இப்போது பொது மக்களின் பார்வைக்காகவே இந்த அரண்மனை வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மதியம் இரண்டிலிருந்து மூன்றரை வரை இங்கு ஒரு சிறப்பு வைபவம் நடைபெருகின்றது. இதனை Royal Guard changing ceremony என்கின்றார்கள். லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெருவது போன்ற ஒன்றுதான் இதுவும். ஆனால் அங்கிருக்கும் பிரமாண்டம் இங்கில்லை. அதே போல Praque, செக் நாட்டிலுள்ள அரண்மனையிலும் இன்றளவும் மிகப்பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கும் இந்த வகை சடங்குகளை விட சற்று எளிமையாகத் தான் இங்கு இருக்கின்றது. கொரிய பாரம்பரிய உடையணிந்த காவலர்கள் அணிவகுத்து
வந்து சில சடங்குகளைச் செய்து, பின்னர் உறுதி மொழி செய்து விட்டு அரண்மனை வாசலுக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்வதுதான் இந்த சடங்கு. இதனைப் பார்ப்பதற்காக தினமும் சுற்றுப்பயணிகள் கூடுகின்றனர். திங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் இந்த சிறப்பு வைபவம் தொடர்ந்து நடக்கின்றது.

அரண்மனையையும் அதனை ஒட்டிய பூங்காவையும் பார்த்து விட்டு shopping செல்வதாகத் திட்டம். மதிய உணவிற்கு கண்ணனும் வருவதாகத் தெரிவித்திருந்தார். ஆக சியோலில் பிரசித்தி பெற்ற Namdaemun Market செல்வதற்கு முன்னர் மதிய உணவிற்காக உணவுக் கடையைத் தேட ஆரம்பித்தோம்.
Published at 02:52 am by ksuba
Tuesday, December 23, 2003
Travelog - Seoul, S.Korea 2
தென் கொரியாவின் வடக்குப் பகுதியில் வடகொரியா அதோடு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன; கிழக்கில் ஜப்பான். ஆக தென் கொரியா பல ஆண்டுகளாக பலமுனை தாக்குதல்களை இந்த அண்டை நாடுகளிடமிருந்து அனுபவித்து வந்துள்ளது என்பதை தெரிந்து
கொள்ள முடியும்.
கொரிய தீபகற்பத்தின் சுற்றளவு 222,154 square kilometers. ஏறக்குறைய இங்கிலாந்தின் அளவை ஒத்தது. தென் கொரியாவின் 70 சதவிகித நிலப்பரப்பு மலைப்பாங்கானது. அதானல் எல்லா இடங்களிலும் இயற்கை அழகு நிறைந்த மலைகளைக் காண முடிகின்றது. தலைநகரான சியோலிலும் இதே நிலைதான். சியோல் நகரத்திலேயே மலைப்பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன. சுற்றுப்பயணிகளை கவரும் வகையில் மலை ஏற்றம் செல்வதற்கான வசதிகளையெல்லாம் சிறப்பாக செய்து வைத்திருக்கின்றனர்.
கொரியத் தலைநகரான சியோலில் சுற்றிப்பார்ப்பதற்குப் பல இடங்கள் இருக்கின்றன. கோடை காலத்தில் வருபவர்களுக்கு சியோல் நிச்சயமாக ஒரு
சுவர்க்க புரியாகத்தான் இருக்கும். ஐரோப்பாவில் இருந்து இங்கு வருபவர்கள் கொரியாவில் தாராளமாச் செலவு செய்ய முடியும் என்றே சொல்லலாம். தங்கும் விடுதிகள், உணவு, மலிவான நுழைவுக் கட்டணம், மலிவான விலையில் தரமான பொருட்கள் போன்றவை இங்குள்ள சிறப்புக்கள்.

உலகின் மிகப் பெரிய Indoor Theme Park சியோலில் தான் இருக்கின்றது. குளிராக இருந்ததால் முதலில் இதற்குச் செல்வது சரி என்று தோன்றியதால் Lotte World Theme Park கிளம்பினேன். மிகப் பிரமாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்ட இடம் இது. 18,000 வொன் (ஏறக்குறைய 14 EUR) கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டால் எல்லா மாதிரியான விளையாட்டுக்களிலும் சேர்ந்து கொள்ளலாம். பலூனில் ஏறி Theme Park முழுவதையும் சுற்றுவது, இரயிலில் பயணித்து இந்த இடத்தை முழுமையாக சுற்றிப் பார்ப்பது, பேய் வீட்டிற்குள் சென்று பயங்கரமான அனுபவத்தைப் பெறுவது, சிந்துபாத்தோடு சேர்ந்து கொண்டு புதையல் தேடுவது, இப்படிப் பல. ஒரு நாளில் முடிக்கமுடியாத அளவிற்குப் பல அங்கங்கள் இருக்கின்றன. இப்படி விளையாடும் போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

Lotte World செல்வதற்கு எந்த சிரமமும் கிடையாது. சியோல் நகரில் எந்தப் பகுதியில் Subway டிக்கெட் எடுத்தாலும் 700 வொன் தான். (ஏறக்குறைய 50 சென் EUR) இரயிலை விட்டு இறங்கியதுமே Lotte World நுழைவாசலுக்கு வந்துவிடுவோம். அதனால் இதனைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. உணவுக் கடைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. அதிகமாகக் கொரிய வகை உணவுகள் தான் கிடைத்தாலும், மற்ற வகை உணவுகளும் ஒன்றிரண்டு இருக்கின்றன. சைவ உணவுக்காரர்களுக்கு இங்கு திண்டாட்டம் தான். கொரியர்களுக்குக் சைவ உணவைப் பற்றிய அவ்வளவான பிரக்ஞை கிடையாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. எந்த உணவிலும் கடல் உணவு வகைகளை சேர்க்காமல் தயாரிப்பது அவர்களுக்கு முடியாத ஒன்று போல தோன்றுகின்றது. ஆனாலும் இங்கு சில ஆலயங்களில் புத்த பிக்குகள் சைவ உணவுகளை வழங்குவதாகவும் குறிப்புக்களில் தேடி வைத்திருந்தேன். ஆனால் இந்த ஆலயங்கள் அருகாமையில் இல்லை. ஆக Pizza, cheese burger, french fries இப்படி சாப்பிட்டுத்தான் உயிர் வாழ முடியும்..:-)
 |
ஒரு நாள் முழுதும் மிக இனிமையாகக் கழிந்தது. சியோலுக்கு வருபவர்கள் இந்த Lotte World வருவதற்கு மறக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இது நிச்சயமாக அமையும். |
மறுநாள் சியோலில் இருக்கும் மிகப்பேரிய அரண்மனைக்கு சென்று வரவேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். இந்த அரண்மனையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு வைபவம் நடக்கின்றது. அதைப் பற்றிய செய்தி நாளைக்கு!
Published at 02:37 am by ksuba
Monday, December 22, 2003
Travelog - Seoul, S.Korea 1
Ģ(ɢ) Ƹ â¡ Ƣ . ټ Ţ â ý Ţ ħ ɡ ܼ . ɾ ¡ħ Ȣ ŢӨȨ Ţ¡ Ţġ ¢ ĺ¡Ţ ġ â¡Ţ ½ ġ Ȣ. â¡Ţ ɢš¡ . ġ 측 ʦ Ţ.
ɢ¢Ģ KLM Ţ ¢ Ƣ Amstredam Seoul . ½ о â Air France Ţ KLM Ţ ȡ ̸ Ȣ. Ţ¡ Ҿ Ө, Ƣ š Ǣ 측 ý Ţ츢 , Ţ¡ ã¡ KLM Ţ ɸ Ȣ. ɡ ĸ ƨ¡ ǡ ¢ 츢 Ţ 츢.
Air France ھ . ĸ Ţ á ġ air france Ƣ о . Ţ ̨š ½ ȡ ý Ţ Ȣ Ţš. ɡ Ţ . Ө Ţ츢. š. Ţ Ƣ ǡ Ţ š; Ţ Ţ ; Air France- Ҿ Ţ. áŢ Ţ ½ ȡ ¡. Air France - KLM ܼ ӨȨ 츢ȧ . 11:35 12:45 Amsterdam Ţħ Ѩ . ɡ Ţ¡ â 측 ¢. Amstredam -Ģ Seoul Ţ â¡ Ũ¢ .
Ţ â ½. 쨸 . ɧ ġ Ţ. Ȣ â ɢ ȡ. . Ȣ . ۨ Ȣ Ǣ ɾ . ¢ . . ɢ Ţš Ţ. " 3 츢. ھ. ¢ ۨ¨ " 측 . "ۨ 쨸 츢 . ɡ ¢ 12 ½ ¡. " Ψ¡ Ģ Ţ Ţ. â¡Ţ ½, ټ Ӿ ¡ ̧ǧ . 츢 . â 츧 â šǡ Ţ ɾ Ȣ 츢 Ţ. ɡ ¡ 츧ǡ ġ ɨ ʧ¡ Ȣ Ţ. ž ɢ¡ ; ; Ǣâ â¡ ¨ Ţ Ţ ɧ Ȣ .

11:15 ½ . ɧ ը âŢ Ţ ž Ȣ â . Ţ ¢ š Ţ. âǡ âá Ӹ ɨ¡ ç Ȣ. á Ũĸٸ츢 측 츢 ¡
Ȣ측 Ţ ¡ âħ ġ !
Published at 05:13 am by ksuba
|
 |
 |
 |
 |
 |
 |
|
|